t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2025




திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:986

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

பொருள்:
தோல்வியை தாழ்ந்தவரிடத்திலும் ஒத்துக்கொள்வது நிறை குணத்தின் உரைகல் எனப்படும்.

பழமொழி :
The bearer knows the burden.

சுமப்பவனுக்கு தான் பாரம் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

* பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன். 

* பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன்.

பொன்மொழி :

உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். ---பாரதியார்

பொது அறிவு : 

1. நம் மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்து எது? 

விடை: நிலக்கடலை.         

2. நீரில் மூழ்காத விலங்கு எது? 

விடை :முள்ளம்பன்றி

English words & meanings :

 Author. - எழுத்தாளர்,

Cook. - சமையல்காரர்

வேளாண்மையும் வாழ்வும் : 

 மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வளத்திற்கான தேவை அதிகரிக்கிறது, அதனால்தான் நீர் மேலாண்மை முக்கியமானது.

மார்ச் 11

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.
நீதிக்கதை

 எளியவர்களாலும் உதவ முடியும்

செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பெரிய காடு. அங்கு ஆண் சிங்கம் ஒன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது

அப்போது சுண்டெலி ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது.

அதனால் சிங்கத்தின் தூக்கம் கலைந்தது. சினம் பொங்கியது, கண்கள் சிவந்தன. சுண்டெலியைக் கடுமையாகப் பார்த்தது.

சுண்டெலி அஞ்சி நடுங்கியது. சிங்கத்தின் காலடியில் வீழ்ந்து

“வனராஜனே! என்னை மன்னித்து விடு, எப்போதாவது நன்றி மறவாமல், உனக்கு உதவி செய்வேன்” என்று மன்றாடியது.

சிங்கம் ஏளனமாகச் சிரித்து, “நீயா எனக்கு உதவி செய்யப் போகிறாய்? ஓடிப்போ” என்று கூறி, சுண்டெலியை மன்னித்தது. பல நாட்களுக்குப் பிறகு, வேடர்கள் விரித்த வலையில் அந்தச் சிங்கம் அகப்பட்டுக் கொண்டது. தப்பிக்க வழி இல்லாமல் தவித்தது. அந்தக் காடே அதிரும்படி முழுக்கமிட்டது.

இதர மிருகங்கள் எல்லாம் பயந்து ஓடி மறைந்தன. சிங்கத்தின் குரலைக் கேட்ட சுண்டெலி ஒடி வந்து பார்த்தது. சிங்கத்தின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தியது.

“வனராஜனே! முன்பு நீ மன்னித்ததை நான் மறக்கவில்லை; என்னுடைய பற்களால் சிறுகச் சிறுகக் கடித்து, வலையைத் துண்டித்து விடுகிறேன். 

நீ உடனே வலையிலிருந்து வெளியேறி விடலாம்” என்று கூறி, வலையைக் கடித்து, துண்டித்து விட்டது சுண்டெலி.

சுண்டெலி தனக்கு உதவி செய்து, உயிர் பிழைக்கச் செய்ததை சிங்கம், நன்றிப் பெருக்கோடு சுண்டெலியைப் பாராட்டியது. முன்பு, ஏளனமாக நினைத்ததை எண்ணி வருந்தியது.

நீதி: சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இன்றைய செய்திகள்

11.03.2025

* தமிழகத்தில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.

* இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள் ‘ஸ்காட்-1’ தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

* கனடா புதிய பிரதமரானார் மார்க் கார்னி: அமெரிக்க பரஸ்பர வரி விதிப்புக்கு பணிய மாட்டோம் என பேச்சு.

* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: காலிறுதியில் ஜார்கண்ட், மராட்டியம், மிசோரம், அரியானா அணிகள் வெற்றி.

* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி: ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* High Court judges have suggested that people who wanted join in Tamilnadu government jobs should know how to speak and write in Tamil in Tamil Nadu.

* In Tamil Nadu, in 2023-24, wind power installation increased by 9,015 MW and solar power capacity increased to 1,261 MW.

* Scott-1 is the world's first trading satellite to monitor the space created by Indian Start-up.It has taken the picture of South America and sent it by this it
started its operation.

* Mark Carni became the new Prime Minister of Canada: Saying "we won't surrender ourselves for the US mutual taxation".

* National Senior Women's Hockey Tournament: Jharkhand, Maratham, Mizoram and Haryana teams win in the quarter -finals.

* Indianwells Tennis Tournament: Progress to Jessica Begula 4th round.

Covai women ICT_போதிமரம்


10 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2025



திருக்குறள்: 

பால் :பொருட்பால்

 அதிகாரம்: சான்றாண்மை

 குறள் எண்:985
 ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
 மாற்றாரை மாற்றும் படை.

 பொருள்: காரியம் முடிப்போரது திறமை பணிந்து போதல்; அதுவே பகைவரை நண்பராக்குங் கருவி.

பழமொழி :
செய்யுள் அழகு மனதைக் கொள்ளை கொள்ளுதல்.

The charm of the poetry captivates the soul.

இரண்டொழுக்க பண்புகள் :

* பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன். 

* பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன்.

பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.

பொது அறிவு : 

1. கங்கை நதி தேசிய நதியாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?  

விடை : 2008 ஆம் ஆண்டு.      

2. மழை நீரை மட்டும் குடிக்கும் பறவை எது? 

விடை : சடக் பறவை

English words & meanings :

 Artist. - ஓவியர்

Assistant. - உதவியாளர்
வேளாண்மையும் வாழ்வும் : 

 புவியின் நீரில் சுமார் 3% மட்டுமே நன்னீர், இதில் சுமார் 1.2% மட்டுமே குடிக்கக்கூடியது (மீதமுள்ளவை பனிப்பாறைகள், பனிக்கட்டிகள், நிரந்தர உறைபனி அல்லது ஆழமான நிலத்தடியில் பிணைக்கப்பட்டுள்ளன)

மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.
நீதிக்கதை

 உதவியும் ஒத்துழைப்பும்

ஒரு நாள், வாயில் உள்ள பற்கள் அனைத்தும் ஒன்று கூடி, நாம் எல்லோரும் கடப்பட்டு பொருள்களை சிரமத்தோடு கடித்து, மெல்லுகிறோம். ஆனால், இந்த நாக்குக்கு ஒரு உழைப்பும் இல்லை, சுவைத்து, உண்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

மேலும், நாம் பெரும்பான்மையானவர்கள். நாக்கோ சிறுபான்மை. அதனால் நாம் நம்முடைய வலிமையைக் காட்டுவதற்காக, நாக்கைக் கடித்து புண் ஆக்கிவிடுவோம், அது என்ன செய்யும் பார்க்கலாம் என்ற தீர்மானித்தன.

அதை அறிந்த நாக்கு, “அடே பற்களே! நாம் அனைவரும் மனித உடலில் உள்ள உறுப்புகள். ஒன்றுக்கொன்று உதவியுடனும், ஒத்துழைப்புடனும் இருந்து, செயல்படுவதே முறை. இதில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரவர் கடமையை அவரவர் செய்வதே சிறப்பு. மீறி தகராறு செய்வீர்களானால், நான் என்ன செய்வேன் தெரியுமா? தெருவில் போய்க் கொண்டிருக்கும் ஒரு முரட்டு ஆளைப் பார்த்து, ‘அடே, முரடனே படவா!’ என்று சொல்லி விட்டு, நான் உள்ளே போய் விடுவேன்”. அவன் வேகமாக வந்து, முகத்தில் பல குத்துகள் விடுவான். நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒருபக்கமாக, உதிர்ந்து போய்விடுவீர்கள்” என்று எச்சரித்தது நாக்கு.

நாக்கு கூறியது உண்மைதான்! என்பதை பற்கள் உணர்ந்தன.

நீதி:ஒருவருக்கு அடுத்தவர் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

10.03.2025

* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள தமிழகத்தில் 22 இடங்களில் 26,000 பெண் போலீஸாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

* 9 நகரங்களில் ரூ.72 கோடி செலவில் தோழி விடுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் இந்தியா 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

* ‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதித்ததை எடுத்துக் கூறியதால், வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

* 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது இந்தியா..நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* 26,000 female policemen have to be given skills development training in 22 places in Tamil Nadu to handle crimes against women and children.

* CM Stalin's announced to build "Thozhi Viduthikal" in 9 cities at a cost of Rs 72 crore.

* India is ranked No. 2 in women-led start-up companies.

* US President Trump has boasted that India has agreed to reduce taxes as India has taken too much tax on US goods.

* India won the Champion Trophy Cup after 12 years.India beat New Zealand by 4 wickets in hectic final.

Covai women ICT_போதிமரம்


8 March 2025

TNPSC, SSC, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு


அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் - தமிழ்நாடு அரசின் செய்தி

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் (பக்கம் 3ல்) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!!

மார்ச் 2025 மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பித்தல் தொடர்பாக சில அறிவுரைகள்

மார்ச் 2025 மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பித்தல் தொடர்பாக சில அறிவுரைகள்!


அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு உயரும்? - கணக்கீடு வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் ஒருவாரத்தில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  

7 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றாண்மை

குறள் எண்:984
 கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
 சொல்லா நலத்தது சால்பு.

 பொருள்: தவம் என்பது எவ்வுயிரையும் கொல்லாமை; பிறர் குறையை கூறாமை சான்றாண்மை எனப்படும்.

பழமொழி :
செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்.

Whatever is worth doing, is worth doing well.

இரண்டொழுக்க பண்புகள் :   

* பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     

 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .

பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.

பொது அறிவு : 

1. தாமரைக் கோயில் எங்கே அமைந்துள்ளது? 

விடை: டெல்லி.       

2. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் யார்? 

விடை: குதிராம் போஸ்

English words & meanings :

 Actor. - நடிகர்
 
Actress. - நடிகை

வேளாண்மையும் வாழ்வும் : 

 பயிர் வேர் மண்டல மண்ணில் அதிகப்படியான நீர் வளர்ச்சியைத் தடுக்கிறது, குறிப்பாக முக்கிய பயிர் நிலைகளில். வயலில் நீர் தேங்குவது கசிவு அல்லது அதிகப்படியான மண் உப்புத்தன்மைக்கு வழிவகுக்கும்.

நீதிக்கதை

  பிறந்த நாள் பரிசு



மன்னர் கிருஷ்ண

தேவராயருக்குப் 

பிறந்தநாள் விழா. 

நகரமெல்லாம் 

தோரணம், வீடெல்லாம் 

அலங்காரம்! மக்கள் 

தங்கள் பிறந்த நாள் 

போல மன்னரின் பிறந்த 

நாளை மகிழ்ச்சியோடு 

கொண்டாடினர்.



மறுநாள் அரச சபையில் 

அரசருக்கு மரியாதை 

செலுத்துதல் நடந்தது. 

முதலில் வெளி

நாடுகளிலிருந்து வந்த 

அரசப் பிரதிநிதிகள், 

தங்கள் நாட்டு 

மன்னர்கள் அனுப்பிய 

பரிசுகளைத் தந்தனர்.



பிறகு அரசப் 

பிரதிநிதிகள், பொது

மக்கள், மன்னருக்கு 

பரிசளித்து மரியாதை 

செலுத்தினார்கள். 

அதன்பிறகு அரசரின் 

நெருங்கிய நண்பர்கள் 

தங்கள் பரிசுகளை 

அளித்தனர். 



அப்போதுதான் 

பெரியதொரு 

பொட்டலத்துடன் 

தெனாலிராமன் 

உள்ளேநுழைந்தான். 

அரசர் உள்பட 

எல்லாரும் வியப்போடு 

பார்த்தனர்.



மற்றவர்களிடம் 

பரிசுகளை வாங்கித் 

தன் அருகே 

வைத்த மன்னர், 

தெனாலிராமன் 

கொண்டு வந்த பரிசுப் 

பொட்டலம் மிகப் 

பெரிதாக இருந்ததால் 

அவையில்உள்ளவர்கள் 

ஆவலோடு என்ன பரிசு 

என்று பார்த்ததால்

அந்தப் பொட்டலத்தைப் 

பிரிக்கும்படி 

தெனாலிராமனிடம் 

கூறினார் அரசர்.



தெனாலிராமன் 

தயங்காமல் 

பொட்டலத்தைப் பிரித்தான். 

பிரித்துக் கொண்டே 

இருந்தான். பிரிக்கப் 

பிரிக்கத் தாழைமடல்கள் 

காலடியில் சேர்ந்தனவே 

தவிர பரிசுப் பொருள்

 என்னவென்று 

தெரியவில்லை.



அதனால் எல்லாரும் 

ஆவலுடன் கவனித்தனர். 

கடைசியில் மிகச்சிறிய 

பொட்டலமாக இருந்ததைப் 

பிரித்தான். அதற்குள் 

நன்றாகப் பழுத்துக் 

காய்ந்த புளியம்பழம்

 ஒன்றிருந்தது.



அவையினர் கேலியாகச் 

சிரித்தனர்.அரசர் 

கையமர்த்திசிரிப்பு 

அடங்கியவுடன், 

”தெனாலிராமன் 

கொடுத்த பரிசு சிறிதாக 

இருக்கலாம். அதற்கு 

அவன் கொடுக்கப் 

போகும் விளக்கம் பெரிதாக 

இருக்கலாமல்லவா?” என்று 

அவையினரைப் பார்த்துக் 

கூறிவிட்டு தெனாலிராமன் 

பக்கம் திரும்பி, “”ராமா 

இந்த சிறிய பொருளைத் 

தேர்ந்தெடுத்ததின் 

காரணம் என்ன?” எனக் 

கேட்டார்.



“அரசே, ஒரு நாட்டை 

ஆளும் மன்னர் எப்படி

இருக்க வேண்டும் என்ற 

தத்துவத்தை விளக்கும் 

பழம் புளியம்பழம் 

ஒன்று தான். மன்னராக 

இருப்பவர் உலகம் 

என்ற புளிய மரத்தில்

காய்க்கும்பழத்தைப் 

போன்றவர். அவர் 

பழத்தின் சுவையைப் 

போல இனிமையானவராக 

இருக்க வேண்டும்.



“அதே நேரத்தில் 

ஆசாபாசங்கள் என்ற 

புளியம்பழ ஓட்டில் 

ஒட்டாமலும் இருக்க 

வேண்டும் என்பதை 

விளக்கவே இந்த 

புளியம்பழத்தைப் 

பரிசாகக் கொண்டு

வந்தேன். புளியம்பழமும் 

ஓடும்போல 

இருங்கள்!” என்றான்.



அவையினர் கைதட்டி 

ஆரவாரம் செய்தனர். 

மன்னர் கண்கள் பனிக்க 

ஆசனத்தைவிட்டு எழுந்து 

தெனாலிராமனைத் தழுவி, 

“ராமா எனக்குச் சரியான 

புத்தி புகட்டினாய். ஒரு 

பிறந்த நாள் விழாவிற்கு 

இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.



”பொக்கிஷப் பணமும் 

பொது மக்கள் பணமும் 

வீணாகும்படி செய்து 

விட்டேன்.உடனே 

விசேடங்களை 

நிறுத்துங்கள். இனி 

என் பிறந்தநாளன்று 

கோயில்களில் மட்டுமே 

அர்ச்சனை ஆராதனை 

செய்யப்பட வேண்டும். 

அவசியமில்லாமல் 

பணத்தை ஆடம்பரமாகச் 

செலவு செய்யக்கூடாது,” 

என உத்தரவிட்டார்.



தெனாலிராமனின் 

துணிச்சலையும் 

சாதுரியத்தையும் 

எல்லாரும் 

பாராட்டினர்.

இன்றைய செய்திகள்

07.03.2025

* ரூ.274 கோடியில் ஒன்றரை ஆண்டாக நடந்துவந்த எழும்பூர் - கடற்கரை 4-வது பாதை பணி நிறைவு: விரைவில் சோதனை ஓட்டம்.

* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளால் 2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல் - நீதிபதி அதிருப்தி.

* மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 4.1 அலகுகளாக பதிவானது.

* பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.

* ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி.

Today's Headlines

* Chennai's Ezhumbur - Marina 4th line project completed at a cost of ₹274 crores; trial run soon.

* Court expresses dissatisfaction over non-compliance with its orders, says 550 contempt cases filed against officials in 2 months.

* Two earthquakes hit Manipur within an hour, measuring 5.7 and 4.1 on the Richter scale.

* ₹80,000 crore worth of gold reserves discovered in Pakistan's Sindh region.

* Indian chess players Praggnanandhaa and Aravindh lead in the Braintree Masters International Chess Tournament.

* Indian shuttler Pranav wins in the opening round of the Orleans Masters Badminton Tournament.

Covai women ICT_போதிமரம்


Page 1 of 29821234567...2982Next »Last

JOIN KALVICHUDAR CHANNEL