. -->

Now Online

FLASH NEWS


Thursday 28 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.03.2024




திருக்குறள்:

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:386

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

விளக்கம்:

காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

பழமொழி :
Silence gives consent

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி


இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட புத்தி சாலியான எதிரியிடம் சேர்வது மேல்.
- பெர்னாட்ஷா.

பொது அறிவு : 

1. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?


விடை: பச்சோந்தி

2. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?

விடை: வரிக்குதிரை
English words & meanings :

 Brittle - breakable;உடையக்கூடிய
Baffle - Astound;குழப்பம்
ஆரோக்ய வாழ்வு : 

புளுச்சை கீரை : இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது பசி உணர்வை குறைத்து நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.

மார்ச் 28

மாக்சிம் கார்க்கி  அவர்களின் பிறந்தநாள்


மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 குணம் கெட்ட கொக்கு



ஒரு பெரிய குளத்தில் நிறைய மீன்கள் இருந்தது. அவைகளுடன் பெரிய நண்டு ஒன்றும் இருந்தது. வேறு பெரிய கொக்கு ஒன்றும் இருந்தது. இவைகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒன்றுக்கொன்று உதவி வந்தன.

ஒரு கடுங்கோடையில் அக்குளத்தில் நீர் வற்றியது. மீன்களும் நண்டும் அங்கிருக்க முடியாமல் தவித்தன. இதைக் கண்ட கொக்கு அவைகளுக்கு உதவி புரிவதாகச் சொல்லிற்று.

தனது அலகால் ஒவ்வொரு மீனாக கவ்விச் சென்று வேறு நீர் உள்ள குளத்திற்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லிற்று. அம்மாதிரி ஒவ்வொன்றாகக் கவ்விச் சென்றது. ஆனால் அவைகளை வேறு குளத்திற்கு எடுத்துச் செல்லாமல் ஒரு பாறையின்மேல் வைத்துக் கொன்று தின்று வந்தது.

இவ்வாறு எல்லா மீன்களையும் கவ்வி எடுத்துச் சென்று கொன்று தின்றது.

நீர் வற்றின குளத்தில் கடைசியில் நண்டு மாத்திரம் இருந்தது. கொக்கிடம் நண்டு தன்னையும் காப்பாற்றுமாறு கூறியது. நண்டையும் வேறு குளத்திற்கு எடுத்து செல்ல கொக்கு சம்மதித்தது. உடனே நண்டு கொக்கின் கழுத்தின் மேல் கவ்விப் பிடித்துக் கொண்டது. கொக்கும் பறந்து சென்றது.

பாறையின் அருகே வரும் போது நண்டு கீழே பாறையிலிருந்த மீன்களின் செதில்களைக் கண்டது. அதற்குக் கொக்கின் தீச்செயல் விளங்கிற்று. உடனே சிறிதும் தாமதியாமல் தனது கால்களால் கொக்கின் கழுத்தை அழுத்தி இறுக்கியது. கொக்கும் மூச்சுத் திணறி கீழே விழுந்து இறந்தது. நண்டும் தப்பிச் சென்றது.

இன்றைய செய்திகள்

28.03.2024

*சாலை நடுவில் மிளிரும் ' மெதுவாக செல்லுங்கள்' வாசகம்; இரவு நேரங்களில் விபத்து தடுக்க நடவடிக்கை.

 *முதல் முறையாக ஓட்டு போடுபவர்களுக்கு பரிசு அறிவித்த வேலூர் கலெக்டர்.

 *தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம்.

 *மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீர் திறப்பு.
 
*மியாமி ஓபன் டென்னிஸ்: ரோகன் 
போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* 'Go Slow' reflective light studs in the middle of the road; a preventative measure to avoid accidents at night.

  * Vellore Collector announces a prize for the voters for the first time regarding elections.

  *Election-related complaints can be lodged at the number 1950.

  *  200 cubic feet of water per second is Released from the Mettur dam for drinking water requirement.
 
 *Miami Open Tennis: Rogan
 Bopanna pair advance to semi-finals.
 

Wednesday 27 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2024


 
திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

விளக்கம்:

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

பழமொழி :
Set a thief to catch a thief

முள்ளை முள்ளால் எடு


இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

இந்த உலகில் நிகரில்லாத செல்வம் தன்னம்பிக்கையே.
- ஔவையார்.

பொது அறிவு : 

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?


விடை: டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டோன் பிஷ் 

English words & meanings :

 Adjourn - postpone;ஒத்திவைக்க.
 authentic - real; உண்மையான.

ஆரோக்ய வாழ்வு : 

புளுச்சை கீரை: சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  
உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.



யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

நீதிக்கதை

 சிநேகமாக்கிக்கொள்ளத் தக்கவர்களை ஆராயும் திறம்.



ஒரு மூடன் ஒரு வணிகருடனே கூடிக்கொண்டு சிநேகமாக இருவரும் பயணம் பண்ணினார்கள். பண்ணும்போது இரவு வந்துவிட்டதால் அந்த

மூடன் வழியில் படுத்துக்கொண்டான். அப்பொழுது அந்த வணிகர் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் மறைவில் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்த வழியிலே போகிற கள்வர் காலிலே இந்தமூடன் கால் பட்டது. ஒரு கள்வன், "இது என்ன? கட்டை போல் இருக்கிறது" என்றான். அம்மூடன் கோபங் கொண்டு "டேய் மடையா!, உன் வீட்டுக் கட்டை பணம் முடித்துக்கொண்டு இருக்குமா?" என்றான். கள்வர் அவனை உதைத்து அவனிடம் உள்ள பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்றார்கள். போம் போது இந்தப்பணம் நல்லதோ? கெட்டதோ? என்றார்கள். அவன் அதைக்கேட்டு நல்லது, கெட்டது என்று அறியும் பொருட்டு வணிகர் மரத்தடியில் இருக்கிறார் என்று அவரிடம் ஓடி வணிகரை எழுப்பினான். அக் கள்வர்கள் வணிகரிடம் இருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு உதைத்துச் சென்றார்கள். அப்போது வணிகர் மூடனைப்பார்த்து 'அப்பா ! எனக் குத்துணைவேண்டாம். நீ விரும்பிய இடத்திற்குப் போ!' என்று அவன் நட்பை வெறுத்து தனியே சென்றான். வள்ளுவரும் "மூடன் நட்பை விடுதல் இலாபம்" என்று கூறியுள்ளார். 



ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

இன்றைய செய்திகள்

27.03.2024

*மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் தலைவரானார், ஐ.ஐ.டி மெட்ராஸ் முன்னாள் மாணவன் பவன் தவுலுரி.

*இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை; வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இணைப்பு நடவடிக்கை; 5வது புலிகள் காப்பகமான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை.

*கேரள மாநிலம்: பழங்குடியின சமூகத்தினர் 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்; ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

*தமிழ்நாட்டைப் போல இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தொடங்கி வைத்தார்.

*மியாமி ஓபன் டென்னிஸ்: போப்பண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

*Pawan Dauluri, an IIT Madras alumnus, heads Microsoft Windows and Surface.

  *For the first time in India, the Forest Department purchased private forests; this action was taken due to heavy movements of wild animals. 5th Tiger Reserve in Srivilliputhur Meghamalai.

  *Kerala State: 216 people from the tribal community got married at the same stage; it is also featured in the Asian Book of Records.

  * Breakfast program for school students in Sri Lanka like Tamil Nadu. President Ranil Wickremesinghe inaugurated the event.

  *Miami Open tennis: Poppanna pair advance to quarterfinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



2024-25-ம் கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் வெளியீடு


மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ), 2024-25-ம் கல்வியாண்டு வருகிற ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான 2024-25-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், 9 மற்றும் 10-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில், 2 மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை கட்டாய பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும், 3-வது மொழி (தமிழ் உள்பட உள்ளூர் மொழிகள்) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு உள்ளன.

கலை படிப்பு, உடற்கல்வி, உடல் நலம், தொழிற்பயிற்சிகள் ஆகியவற்றை உள்மதிப்பீட்டுக்காக பள்ளிகளே தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டத்தில், 9 பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், 5 கட்டாயப்பாடங்களும், 4 விருப்பப் பாடங்களும் இடம் பெற்றுள்ளன. 3-வது மொழியாக தமிழ் உள்பட 34 மொழிகளை தேர்வு செய்யலாம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.


Monday 25 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2024



 



திருக்குறள்: 

பால்: பொருட்பால். 
இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

விளக்கம்:

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

பழமொழி :
Sadness and gladness succeed eash other

வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

புத்தகம் இல்லாத வீடும், ஜன்னல் இல்லாத வீடும் ஒன்றே .
- சிங்சௌ .

பொது அறிவு : 

1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது? 

இரும்பு. 

2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? 


பிளாட்டினம்.

English words & meanings :

 Yew - an evergreen tree; பசுமை மாறா.
Yore - long ago; வெகு காலத்திற்கு முன்பு.

ஆரோக்ய வாழ்வு : 

புளித்த கீரை :புளித்த கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதால், இது இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது. புளித்த கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.
நீதிக்கதை

 புதையல் ரகசியம்



ஒரு ஊரில் ஒரு வயதான விவசாயி இருந்தார். அவரது மகன்களோ விவசாயத்தில் ஆர்வமின்றி இருந்தனர். தனக்குப் பிறகு அவர்கள் சம்பாத்தியம் இல்லாமல் துன்பப் படுவார்களே என அவர் கவலைப்பட்டார்.

ஒரு தந்திரம் வகுத்தார். இறக்கும் தருவாயில் இருந்த போது அவர்களை அழைத்தார். வயலில் தான் மிகம் பெரும் புதையலைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.

அவர் இறந்த பின்னர் அவர்கள் மண்வெட்டி கடப்பாரைகளை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று ஆழமாகத் தோண்டினர். அவர்களுக்குப் புதையல் கிடைக்க வில்லை. ஆனால் மண் நன்கு பண்படுத்தப்பட்டதால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பணவரவு அவர்களுக்கு வந்தது.



நீதி: முன்னேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை.

இன்றைய செய்திகள்

25.03.2024

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 'நீட்' தேர்வு பயிற்சி இன்று முதல் தொடங்குகிறது.

*பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வை முடித்த மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டனர்.

*தேர்தல் பறக்கும் படை: எட்டு நாள் சோதனையில் ரூபாய் 11 1/2 கோடி பிடிபட்டது மற்றும் ரூபாய் 38 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியது.

*ஒகேனக்கலில் நீர் வரத்து 200 கன அடியாக நீடிப்பு.

Today's Headlines

*NEET practice for government school students starts today.

 *Students who completed their Plus 2 examination at Perunthurai Government Boys Higher Secondary School planted 100 saplings.

 * Rs 11 1/2 crore and drugs worth Rs 38 lakh seized in eight-day raid by Election Flying Squad.

 *Water flow in Okanakkal is increased to 200 cubic feet.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday 24 March 2024

தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்.

தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்.

              PRO duty

*1-Pro dairy
*2-form17c.
*3- 16 points abserver report sheet.
*4- visiter sheet.
*5- pledge commencement of poll and after close the poll.
 *6- Mock poll certificate. மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்  

                       *PO 1 duty. 
 
 *1- elector identify is very important.
*2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால் வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும் 3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்             

            *PO 2 duty

*1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்
*3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்
*4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.       

                  *PO 3 duty

 *வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.

      *General instructions.   

    *49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின் பெயருக்கு நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் refused the Vote என்று எழுத வேண்டும். *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.

 *49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும் வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்

*1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்
*2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்
*3.Test votes
*4.proxy votes
*மேற்கண்ட நிகழ்வுகள் Maximum *நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.

       *குறிப்பு

*தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்

*எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்

வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும்


தேர்தலுக்கு முந்தைய நாள் மற்றும் தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்